Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி பெறும் நிலையில் ஜோபைடன்: வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்ப் வழக்கு!

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (07:33 IST)
வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்ப் வழக்கு!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் அவர் வெற்றி பெற்று அதிபராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சற்றுமுன் வெளியான தகவலின்படி ஜோபைடன் அவர்களுக்கு 264 வாக்குகளும் குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதனால் ஜோபைடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார் என்பதும், அவருக்கு இன்னும் 6 எலக்டரல் வாக்குகளே தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தோல்வி உறுதி என தெரிய வந்ததை அடுத்து பென்சில்வேனியா, ஜார்ஜியா, நார்த் கரோலினாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தரப்பு அதிரடியாக வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை எண்ணிய வாக்குகளின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்றும், மீதம் இருக்கும் தபால் வாக்குகளை எண்ண கூடாது என்றும் டிரம்ப் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
 
தற்போதைய நிலையில் பென்சில்வேனியா, ஜார்ஜியா, நார்த் கரோலினா ஆகிய பகுதிகளில் டிரம்ப் முன்னிலையில் உள்ள நிலையில் தபால் வாக்குகள் ஜோபைடனுக்கு சாதகமாக செல்ல வாய்ப்புள்ளதால் டிரம்ப் இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரியும் டிரம்பின் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments