Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க டிரம்ப் கோரிக்கை.. பதிலடி கொடுத்த ஜஸ்டின்..!

Mahendran
புதன், 8 ஜனவரி 2025 (10:08 IST)
கனடாவை அமெரிக்காவின் ஒரு மாகாணமாக இணைக்க வேண்டும் என்று அதிபராக பொறுப்பேற்க இருக்க இருக்கும் டிரம்ப் வேண்டுகோள் விடுத்த நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என்று கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின்  தெரிவித்தார்.
 
அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் விரைவில் பதவி ஏற்க இருக்கும் நிலையில், அமெரிக்காவின் இராணுவம், வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை மேற்கோள் காட்டி கனடாவை அமெரிக்காவின் இன்னொரு மாகாணமாக மாற்றுவதற்கு கோரிக்கை விடுத்தார். இதனால் பொருளாதார பலத்தை பெறலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
 
ஏற்கனவே சட்டவிரத போதை பொருள் பழக்கம், சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கனடா தடுக்க தவறினால், அந்நாட்டிற்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்த நிலையில், சமீபத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின், டிரம்பின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
 
இதற்கு அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ’அமெரிக்காவுடன் கனடாவை இணைக்க வாய்ப்பே இல்லை’ என்றும், ’அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டிரம்ப் பேச்சு முழுமையான புரிதல் இல்லாததாக உள்ளது என்றும், கனடாவின் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது, நாங்கள் ஒருபோதும் பின் வாங்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கேஜை விட்டுவிட்டு பயணிகளை மட்டும் ஏற்றி வந்த விமானம்! - சென்னை வந்த பயணிகள் ஷாக்!

தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: அமலாக்கத்துறை சம்மன்

டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்ட 5,000-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு: மதுரையில் பரபரப்பு..!

எடப்பாடி பழனிசாமி உறவினர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை.. பெரும் பரபரப்பு..!

முன்கூட்டியே வரவு வைக்கப்படும் மகளிர் உதவித்தொகை.. தமிழக அரசு முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments