ரஷிய படைக்கும் ஐஎஸ்ஐஎஸ்க்கும் பயங்கரவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ராணுவத்தினர் உக்ரைன் மீது போர் தொடுத்து வருகின்றனர். 40 நாட்களுக்கும் மேலாக இரு நாட்டு வீரர்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இ ந் நிலையில் ரஷ்ய ராணுவத்தினரும் ஐஎன் .எஸ் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசமில்லை என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் இன்று காணொலியில் அவர் உரையாற்றியதாவது: ரஷ்ய ராணுவம் உக்ரைனுக்கு உதவுபவர்களை தேடிப் பிடித்துக் கொன்றது. உக்ரேன்னியர்களின் கைகால்களை வெட்டினர் ரஷ்ய ராணுவத்தினர். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
உக்ரைனில் நடக்கும் போர்க்குற்றத்திற்காக ரஸ்ய ராணுவனும் அவர்களுக்கு உத்தரவிடுபவர்க்ளையும் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.