Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோட்டையே கொள்ளையடித்த திருடன்

Webdunia
சனி, 3 பிப்ரவரி 2018 (13:17 IST)
சீனாவில் திருடன் ஒருவன், சாலையை பெயர்த்தெடுத்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பெரும்பாடு பட்டு சேர்க்கும் பணம் மற்றும் நகைகளை, திருடர்கள் எளிதாக கொள்ளையடித்து செல்கின்றனர். இதனால் நகை மற்றும் பணத்தை பறிகொடுத்த மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
 
திருடர்கள் வழக்கமாக பொன், பொருளைத் தான் திருடுவார்கள், ஆனால் வழக்கத்திற்கு மாறாக சீனாவில் ஒரு வினோத  திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
சீனாவில் சாங்கேசு என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் வழியாக செல்லும் 800 மீட்டர் நீள ரோடு இரவோடு இரவாக திடீரென மாயமானது. விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், சம்மந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
 
திருடன் உபயோகித்த வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு போலீசார்  ஷிகு என்ற நபரை கைது செய்தனர். விசாரணையில் திருடன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். திருடிய ரோட்டின் 500 டன் கான்கிரீட் கலவையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்றதாக அவன் தெரிவித்தான். அந்த திருடனை கைது செய்த போலீஸார், அவன் வேறெனென்ன குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கிறான் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் அன்பு தம்பி எடப்பாடி பழனிசாமி..! எம்ஜிஆர் பேசிய வீடியோவை வெளியிட்ட அதிமுக!

கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் முடிவது எப்போது? ரயில்வே நிர்வாகம் தகவல்..!

தமிழ்நாட்டுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! இந்திய வானிலை ஆய்வு மையம்..!

அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல்..!

நாளை தான் கடைசி தினம்.. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments