Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழுத குழந்தைகளின் மூச்சை அடக்கிய தாய் ...உல்லாசத்தினால் வந்த வினை!

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (12:40 IST)
அமெரிக்க நாட்டின்   டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள  தனியார் ஹோட்டலில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில்  பங்கேற்பதற்காகச் சென்ற அமாந்த ஹாகின் என்ற பெண் தன் இரு குழந்தைகளையும் காரில்  அழைத்துச் சென்றுள்ளார். 
அப்போது இரு குழந்தைகளும் ஓயாமல் அழுத வண்ணம் இருந்ததால் கோபமடைந்த அமாந்த ஹாகின், தன்னால் பார்டிக்கு செல்ல முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தில் இரு குழந்தைகளையும் பலமணி நேரம் காரிலேயே போட்டு அடைத்து வைத்துள்ளார். 
 
பின் பார்ட்டிக்கு நிம்மதியாகச் சென்ற அமாந்த ஹாகின் இரவு முழுவதும் உல்லாசமாக இருந்துவிட்டு விடியக் காலையில் தன் காரைத் திறந்து பார்த்துள்ளார். 
 
அப்போது தன் குழந்தைகள் இருவரும் மயக்கம் அடைந்திருப்பதாக நினைத்து அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.குழந்தைகளை பரிசோதித்த டாக்டர் குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்
 
இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிய அவர்கள் வந்து அமாந்த ஹாகினை விசாரித்தனர் . இறுதியில் தான், இருகுழந்தைகளையும் காரில் அடைத்துவிட்டு பல மணி நேரம் கழித்து வந்து திறந்து பார்த்த போது இப்படி மயங்கி இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறியிருக்கிறார். அதன் பின் போலீஸார் அமாந்த ஹாகினை கைது செய்தனர்.
 
பெற்ற தாயே குழந்தைகளைக் காரில் அடைத்துக்கொன்ற சம்பவம் டெக்சாஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments