Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தானில் பெற்ற மகளை சுட்டுக் கொன்ற தந்தை

Advertiesment
பாகிஸ்தானில் பெற்ற மகளை சுட்டுக் கொன்ற தந்தை
, செவ்வாய், 24 ஜனவரி 2023 (23:03 IST)
பாகிஸ்தான் நாட்டில் காதல் திருமணம் செய்து கொண்ட தன் மகளை சுட்டிக் கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் வஜிரிஸ்தான் என்ற பகுதியில் வசிக்கும் நபரின் மகள், அவரது தந்தையின் எதிர்ப்பை மீறி அருகில் வசிக்கும் மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டார்.

தன் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட மகள் மீது ஆத்திரத்தில் இருந்த தந்தை, மகளைப் பழிவாங்க முடிவு செய்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தன் திருமணத்தை உறுதிப்படுத்த  நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுப்பதற்காக அப்பெண் இன்று வந்திருந்தார்.

அங்கு மறைந்திருந்த தந்தை, அவர் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில்,அப்பெண் உயிரிழந்தார்.

உடனே, போலீஸார் அப்பெண்ணின் தந்தையைக் கைது செய்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐக்கிய அமீரகத்திடம் பணம் கேட்ட பாகிஸ்தான் பிரதமர்