Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 வயது மாணவனை வகுப்பறையிலே கற்பழித்த பெண் ஆசிரியை!

15 வயது மாணவனை வகுப்பறையிலே கற்பழித்த பெண் ஆசிரியை!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2017 (12:08 IST)
அமெரிக்காவில் 15 வயது மாணவன் ஒருவனை 31 வயதான பெண் ஆசிரியை ஒருவர் கடந்த 2015-ஆம் ஆண்டு வகுப்பறையிலேயே கற்பழித்த வெட்கக்கேடான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.


 
 
ஜெனிபர் கேஸ்வெல் என்ற 31 வயதான ஆசிரியை ஒருவர் அமெரிக்காவின் ஓக்லோஹோமோ மாகாணத்தில் உள்ள ஹோலிஸ் நகரில் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார்.
 
அதே பள்ளியில் பயின்று வந்த 15 வயதான மாணவன் ஒருவனை ஆசிரியர் ஜெனிபர் 2015-ஆம் ஆண்டு வகுப்பறையிலேயே வைத்து கற்ப்ழித்துள்ளார். இந்த விவகாரம் வெளியில் தெரியவந்ததையடுத்து ஆசிரியை மீது புகார் அளிக்கப்பட்டது.
 
அதன் பின்னர் அதே ஆண்டில் ஆசிரியை மீதான குற்றம் நிருப்பிக்கப்பட்டு அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறை தண்டனையை அனுபதிவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் இழப்பீடு கோரி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
 
அதில், ஆசிரியரின் அந்த செயலால் தனது மகன் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், எல்லா இடங்களிலும் இதனால் அவன் அவமானத்தை சந்தித்து வருகிறான். இதனையடுத்து புதிய பள்ளியில் அவனை சேர்த்துள்ளோம். எனது மகனை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக ஆசிரியையிடமிருந்து இழப்பீடு பெற்று தர வேண்டும் என கூறியிருந்தனர்.
 
இதனை விசாரித்த நீதிமன்றம் மாணவனின் பெற்றோரின் குற்றச்சாட்டில் நியாயம் இருப்பதால் அந்த ஆசிரியர் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு இழப்பீடாக 1 மில்லியன் டாலர் வழங்க வேண்டும் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

அடுத்த கட்டுரையில்
Show comments