Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு குழந்தைக்கு எப்படி மூன்று பேர் பெற்றோர் ஆக முடியும்?

ஒரு குழந்தைக்கு எப்படி மூன்று பேர் பெற்றோர் ஆக முடியும்?
, செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (06:01 IST)
ஒரு குழந்தைக்கு அம்மா, அப்பா என இரண்டு பேர் தான் பெற்றோர்களாக இருக்க முடியும். இதுதான் உலக நியதி. ஆனால் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவரின் சாதனையால் ஒரு குழந்தைக்கு இரண்டு அம்மா, ஒரு அப்பா என மூன்று பேர் பெற்றோர்களாக இருக்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு குழந்தை பேறு இல்லாதவர்கள் பெரும் வரவேற்பு அளித்தபோதிலும் அமெரிக்க அரசு இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.



 
 
சில பெண்களுக்கு குழந்தையை வயிற்றில் சுமக்கும் அளவுக்கு ஆரோக்கியம் இருக்காது. அதாவது அவருடைய மைடோகாண்ட்ரியாவின் ஒரு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இவ்வாறான பெண்களும் குழந்தைகள் பெறும் வகையில் நியூயார்க்கை சேர்ந்த நியூ ஹோப் ஃபேர்டிலிட்டி சென்டரை நடத்தி வரும் டாக்டர். ஜான் ஜாங் என்பவர் ஒரு புதிய முறையை கையாள்கிறார். பிரிட்டனில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மூன்று பெற்றோர் மருத்துவ தொழில்நுட்பத்தை அவர் அமெரிக்காவிலும் புகுத்தி வருகிறார். 
 
அதுதான் அணுக்கரு மாற்றம். பாதிக்கப்பட்ட பெண்ணின் கருமுட்டையில் இருந்து அணுக்கரு (Nucleus) ஒன்றை எடுத்து வேறொரு பெண்ணின் அணுக்கரு இல்லாத கருமுட்டைக்குள் சேர்த்து பின்னர் அது தந்தையின் உயிரணுவால் கருவாக உயிர்பெற்றும் இவ்வாறு ஐந்து கருக்கள் உருவாக்கப்பட்டு அதில் ஒன்றை உண்மையான தாயின் கர்ப்பப்பை உள்ளே வைத்து வளர்க்கப்பட்டு பின்னர் அது ஆரோக்கியமான குழந்தையாக வெளியே வருகிறது. ஆனால் இந்த நடைமுறைக்கு அமெரிக்க அரசு இன்னும் அனுமதி தரவில்லை என்றும் முறையான அனுமதி பெறாமல் இந்த சிகிச்சையை அமெரிக்காவில் தொடரக்கூடாது என்றும் டாக்டருக்கு அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரன் அணிகள் 20 எம்.எல்.ஏக்கள், 6 எம்பிக்கள்: ஆட்சி தப்புமா?