Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

ஆஸ்திரேலியாவில் கத்திக்குத்து நடத்திய தமிழர்! சுட்டுக் கொன்ற போலீஸ்!

Advertiesment
Australia
, புதன், 1 மார்ச் 2023 (08:48 IST)
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் கத்துக்குத்து நடத்திய தமிழ்நாட்டை சேர்ந்தவரை அந்நாட்டு போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை தேடி பலர் பல நாடுகளுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. அவ்வாறாக ஆஸ்திரேலியாவிற்கும் பலர் செல்கின்றனர். ஆனால் சமீபத்தில் இந்திய நபர்களால் ஆஸ்திரேலியாவில் நடந்து வன்முறை சம்பவங்கள் தொடர் பரபரப்புக்கு உள்ளாகி வருகின்றன, சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள அப்ரன் ரயில் நிலையத்தில் தூய்மை பணியாளர் ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த தமிழ்நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் அந்த தூய்மை பணியாளரை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இதை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் போலீஸார் அந்த நபரை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அந்த நபர் கத்தியை வைத்து போலீஸாரையும் தாக்க முயன்றுள்ளனர். இதனால் போலீஸ் அந்த நபரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

பின்னர் நடந்த விசாரணையில் அந்த நபர் தமிழ்நாட்டை சேர்ந்த முகமது ரஹ்மதுல்லா சயது அகமது என்றும், தற்காலிக விசாவில் அவர் ஆஸ்திரேலியாவில் தங்கி வேலை தேடி வந்ததும் தெரிய வந்துள்ளது. எனினும் அவர் தூய்மை பணியாளை ஏன் தாக்கினார் என்பதற்கான காரணம் குறித்து தெரியாத நிலையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிலிண்டர் விலை உயர்வு போல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?