Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் திரும்பி வர 6 மாதம் ஆகுமா? அதிர்ச்சி தகவல்..!

Siva
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (09:04 IST)
விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்பட இரண்டு விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்ப இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ஸ் வில்மோர் ஆகிய  இருவரும் கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் விண்வெளி மையத்துக்கு சென்ற நிலையில் திட்டமிட்டபடி அவர்கள் அதே மாதம் 22ஆம் தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும்.

ஆனால் விண்வெளி களத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் 50 நாட்களுக்கு மேலாக விண்வெளியில் சிக்கி உள்ள சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பி வர இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தான் இருவரையும் பூமிக்கு அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளது.

 விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்ப இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்பதை எடுத்து அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றது.

இதற்கு முன்னர் கடந்த 1990 ஆம் ஆண்டு ரஷ்ய விண்வெளி வீரர் ஒருவர் 437 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தார் என்ற நிலையில் சுனிதா வில்லியம்ஸ் அவர்களும் சுமார்  8 மாதங்கள் விண்வெளியில் தங்கவுள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments