Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெருப்பை குறைக்கும் சூரியன்: உறைய போகிறதா பூமி? – விஞ்ஞானிகள் விளக்கம்!

Webdunia
சனி, 16 மே 2020 (11:54 IST)
கொரோனா ஆபத்திலிருந்து பூமி மெல்ல திரும்பி வரும் நிலையில் சூரியன் வெப்பத்தை குறைத்துக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

உலகமே கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து தற்போது மெல்ல மீண்டு வர தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் சூரியன் தனது செயல்பாட்டை குறைத்துக் கொண்டு வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எரியும் நட்சத்திரமான சூரியனில் தொடர்ந்து வெளியாகும் வெப்பம் பூமிக்கு ஒளியையும், ஆற்றலையும் மட்டுமல்லாது பருவ நிலையையும் வழங்குகிறது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு சிலமுறை சூரியன் தனது எரியும் ஆற்றலை குறைத்துக் கொண்டு வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரியனின் இந்த செயல்பாட்டால் பூமியில் பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு பல இடங்கள் பனியில் உறையும் என கூறப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு 1790 வாக்கில் சூரியனில் நடைபெற்ற இதே மாற்றத்தால் ஐரோப்பாவின் பல நாடுகள் பனியில் மூழ்கின. லண்டனின் புகழ்பெற்ற தேம்ஸ் நதி முழுவதுமாக உறைந்தது வரலாற்றில் அதுவே முதல்முறை. அதற்கு பிறகு பலமுறை சூரியன் தனது ஆற்றலை குறைத்துக் கொண்டுள்ளது, ஆனால் பெரிய அளவில் பாதிப்புகளை அது ஏற்படுத்தவில்லை. அதேபோல இந்த முறை சூரியனில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறைந்த அளவிலேயே உள்ளதால் 1790ல் ஏற்பட்டது போல பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments