Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடரும் தற்கொலை படை தாக்குதல்; அச்சத்தில் ஆப்கான் மக்கள்

Advertiesment
தொடரும் தற்கொலை படை தாக்குதல்; அச்சத்தில் ஆப்கான் மக்கள்
, செவ்வாய், 10 ஜூலை 2018 (16:07 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்கொலை தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
ஆப்கானிஸ்தான் தற்கொலை படை தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தற்கொலை படை தாக்குதலிலும் உயிரிழப்புகள் அதிகரித்துக்கெண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் வீதியில் நடமாடவே அஞ்சி வருகின்றனர்.
 
தற்போது கடைகளுக்கு செல்வதை கூட தவிர்த்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஜலாலாபாத் நகரில் பெட்ரோல் பங்க் அருகே திடீரென குண்டு வெடித்தது. இந்த தற்கொலை படை தாக்குதலில் பொதுமக்கள் 10பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
 
மேலும், 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜப்பானை புரட்டிப் போட்ட மழை - பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு