Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கையில் உணவு பஞ்சம்?? பள்ளி, அலுவலகங்கள் மூடல்!

Advertiesment
Ranil Wickramasinghe
, ஞாயிறு, 19 ஜூன் 2022 (10:39 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் பள்ளி, அரசு அலுவலகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் சமீபத்தில் இலங்கையில் போராட்டம் வெடித்தது. அரசியல்வாதிகள் இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.
அவருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கெ பதவியேற்றுள்ளார். எனினும் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நீடித்து வருகிறது. இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன. 

இந்நிலையில் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. மக்கள் பலர் எரிபொருளுக்காக வரிசையில் வாகனங்களோடு காத்திருக்க தொடங்கியுள்ளனர். எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இலங்கையில் பள்ளி, அரசு அலுவலகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்றொரு பக்கம் உணவு பஞ்சம் ஏற்படும் ஆபத்து எழுந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கெ தெரிவித்துள்ளார். இதனால் 40 முதல் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இலங்கையில் தரிசாக உள்ள 1,500க்கும் அதிகமான ஏக்கர் நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றுவதன் மூலம் எதிர்காலத்தில் உணவு பஞ்சம் ஏற்படாமல் தடுக்கலாம் என கூறியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கெ, இந்த திட்டத்தில் ராணுவத்தை ஈடுபடுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12 ஆயிரமாக உயர்ந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!