கண்ணில் டாட்டூ வரைந்த பிரபல பாடகி
போலந்து நாட்டின் பிரபல பாப் இசை பாடகி அலெக்ஸாண்ட்ரா. 25 வயதான இந்த இளம் பாடகி பிரபல பாப் இசை பாடகர் போபெக் என்பவரின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் போபெக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது இரண்டு கண்களிலும் கருமை நிற டாட்டூவை வரைந்திருந்தார். இந்த டாட்டூவை பார்த்து அசந்துபோன அலெக்சாண்ட்ரா தானும் அதே போன்று டாட்டூ வரைய வேண்டும் என்று முடிவு செய்தார்
இதனை அடுத்து டாட்டூ போடும் கலைஞர் ஒருவரை அணுகி தனது கண்களிலும் டாட்டூ வரையுமாறு கூறினார். ஆனால் அவர் அணுகிய நபர் டாட்டூ போடுவதில் அதிக அனுபவம் இல்லாதவர் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு அவர் அலெக்சான்ட்ரியாவுக்கு டாட்டூ வரைந்துள்ளார். இந்த நிலையில் டாட்டூ போட்டு முடித்தவுடன் கண்ணில் எரிச்சலை உணர்ந்த அலெக்சாட்ரா வலியால் துடித்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது டாட்டூ போட்டதால் அவருடைய வலது கண் முற்றிலும் பாதிக்கப்பட்டு பார்வை இழப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் வலது கண்ணிலும் மிக விரைவில் பார்வை இழப்பு ஏற்படும் என்றும் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதனை அடுத்து அலெக்சாட்ரா கொடுத்த புகாரின் பேரில் டாட்டூ கலைஞர் கைது செய்யப்பட்டு அவரிடம் காவல்துறை விசாரணை நடந்து வருகிறது. இன்னொரு நபரை பார்த்து ஆசைப்பட்டு டாட்டூ போட முயன்ற இளம் பாடகி தற்போது பார்வை இழந்து பரிதாபமாக இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது