Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இம்மாத இறுதியில் டீமானிடைசேசன்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (19:42 IST)
இம்மாத இறுதியில் டீமானிடைசேசன்: அதிர்ச்சியில் பொதுமக்கள்
கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் டீமானிடைசேசன் என்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதுஎன்பது தெரிந்ததே. இந்த நிலையில் இதே போன்ற ஒரு நடவடிக்கையை சீனாவில் எடுக்க அந்நாட்டு அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் சுமார் 1700க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாகவும் 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் மிக அதிகமாக கரன்சி நோட்டுகளில் மூலம் தான் மக்களுக்கு பரவுகிறது என தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளி ஒருவர் தொட்ட கரன்சி இன்னொருவர் கைக்கு செல்லும் போது அதில் உள்ள வைரஸ் மற்றவர்களுக்கும் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து சீனாவில் உள்ள மொத்த கரன்சியையும் திரும்பப் பெறப்படும் என்றும் அந்த கரன்சிகள் கதிர்வீச்சு மூலம் வெப்பப்படுத்தப்பட்டு அதன் பின்னர் 14 நாட்கள் லாக்கரில் பூட்டி வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கொரோனா வைர|ஸின் ஆயுள்காலம் 14 நாட்கள் என்பதால் அந்த நாட்கள் முடிந்தவுடன் மீண்டும் கதிர்வீச்சு மூலம் வெப்பப்படுத்தப்பட்டு அதன் பின்னர் புழக்கத்தில் விடப்படும் என்றும் தெரிகிறது
 
இந்த இடைப்பட்ட காலத்தில் மக்களின் புழக்கத்திற்காக புதிய கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என சீன அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றாலும் மொரோனா வைரஸ் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளிவரும் என தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments