Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இந்திய வீரரை தேடும் பணி தீவிரம

Advertiesment
ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இந்திய வீரரை தேடும் பணி தீவிரம
, சனி, 22 செப்டம்பர் 2018 (13:03 IST)
இந்திய கடற்படை வீரரான அபிலாஷ் டோமி(39) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயமானதை தொடர்ந்து அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கோல்டன் குலோப் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக அபிலாஷ் டோமி இந்தியாவிலிருந்து சென்றிருந்தார். இந்திய குழுவிற்கு இவர்தான் கேப்டனாக செயல்பட்டார்.


இப்பந்தயம் ஜூலை 10 –ம் தேதி பிரான்ஸில் துவங்கி உலகம் முழுக்க சுற்றும் வகையில் நடந்து வருகிறது. 
இந்நிலையில் கடல் பகுதியில் நிலவிய மோசமான நிலை காரணமாக ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து சுமார் 1900 கடல் மைல் தொலைவில் இவர் பயணித்தபோது திடீரென்று மாயமாகி விட்டார். அவரை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது நவீன தொழில்நுட்பங்கள் எதுவும் இல்லாமல் நடத்தப்பட்ட பாய்மர பந்தயம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு மக்களவை துணை சபாநாயகர் வந்திருக்கின்றேன்... தம்பிதுரை ஆவேசம்