Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த மாதம் முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி! – ரஷ்யா தகவல்!

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (15:22 IST)
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பூசி அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்புகளுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் பல நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. கடந்த வாரம் கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாகவும், அதை மனிதர்களிடம் சோதித்து வெற்றி கண்டுள்ளதாகவும் ரஷ்யாவின் கமலே இன்ஸ்டிட்யூட் தெரிவித்தது.

இந்நிலையில் முன்னதாக அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் சிலருக்கு இந்த மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கமலே மையத்தின் இயக்குனர் அலெக்ஸாண்டர் கின்ஸ்பெர்க் தடுப்பூசி அடுத்த மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் தனியார் நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கலாம் எனவும் கூறியுள்ளார்.

ரஷ்யாவை தொடர்ந்து இங்கிலாந்தும், இந்தியாவும் தடுப்பு மருந்து கண்டறிவதில் போதிய அளவு முன்னேற்றத்தை அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments