ரஷ்யாவில் 10 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு இந்திய மதிப்பில் 13 லட்சம் பரிசாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் பெண்களுக்கு ரஷ்யாவின் 'அம்மா நாயகி' என்ற பட்டம் 'கௌரவமாக' வழங்கப்படும் என்ற உத்தரவில் ரஷ்ய அதிபர் புதின் இந்த வாரம் கையெழுத்திட்டார்.
10வது குழந்தை பிறந்து ஒரு வயது ஆன பிறகு, அவர்களுக்கு 1 மில்லியன் ரூபிள் (சுமார் ₹13 லட்சம்) பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதச் செயலினாலோ அல்லது அவசரகாலச் சூழ்நிலையிலோ, போரில் தங்கள் குழந்தைகளில் யாராவது இறந்தாலும் தாய்மார்கள் 'விருதுக்கு' தகுதி பெறுவார்கள் என்று அறிக்கை கூறுகிறது.
இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவில் அதிகளவு மரணங்கள் நிகழ்ந்த போது இந்த ஆணையை அப்போதைய ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்தார். அதன் பின்னர் இப்போது புடின் இந்த ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.