Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவில் புதினுக்கு எதிராக ராணுவ புரட்சியில் ஈடுபட்டவர் விமான விபத்தில் பலி..!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (07:57 IST)
ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன்னர் புரட்சி போராட்டத்தில் ஈடுபட்ட பிரிகோஜின் என்பவர் விமான விபத்தில் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரஷ்யாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  
 
ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னால் ராணுவ புரட்சியில் ஈடுபட்டவர் பிரிகோஜின். இவர் புதின் அரசுக்கு எதிராக வாக்னர் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பதும் இந்த குழு மூலம் அவர் புரட்சி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில்  ரஷ்யா அதிபரால் தேடப்பட்டு வந்த பிரிகோஜின் பெலாரசில் தஞ்சம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் விமான விபத்தில் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் விமானத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் அந்த விமான விபத்துக்குள்ளானதாகவும் அதில் அவர் பலியாகி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
ரஷ்ய அரசுக்கு எதிராக ராணுவ புரட்சியில் ஈடுபட்ட பிரிகோஜின் விமான விபத்தில் இறந்த தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுக்குநூறான ஹெலிகாப்டர்.. குடும்பத்துடன் பரிதாபமாக பலியான தொழிலதிபர்! - கடைசி வினாடி திக் திக் வீடியோ!

தமிழிசை வீட்டிற்கு திடீரென சென்ற அமித்ஷா.. பாஜக தலைவர் பொறுப்பு அளிக்கப்படுமா?

கனிமொழி கண்டனம் தெரிவித்த சில நிமிடங்களில்.. பொன்முடி பதவி பறிப்பு..!

டிரம்ப் வரிவிதிப்பு ஒத்திவைப்பு எதிரொலி: இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஏற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments