Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விண்வெளிக்கு சென்ற ரஷியாவின் விண்கலம் வெடித்து சிதறியது

விண்வெளிக்கு சென்ற ரஷியாவின் விண்கலம் வெடித்து சிதறியது
, வெள்ளி, 2 டிசம்பர் 2016 (11:13 IST)
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு பொருட்களை ஏற்றிச்சென்ற ரஷியாவின் சரக்கு விண்கலம் வெடித்து சிதறியது.


 

 
பூமி உள்ளிட்ட கிரகங்களை ஆய்வு செய்ய அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைத்துள்ளன. ஆய்வுகளுக்காக அவ்வப்போது செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
 
தற்போது குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதோடு பூமியில் இருந்து விண்வெளி வீரர்கள் அங்கு ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 
அவர்களுக்கு தேவையான பொருட்களை கஜகஸ்தான் நாட்டின் பைக்கானூர் பகுதியில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ரஷியாவுக்கு சொந்தமான ‘சோயுஸ்’ விண்கலத்தின் மூலமாக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
 
அதன்படி சுமார் 2.4 டன் எடைக்கொண்ட உணவு, எரிபொருள், ஆய்வு உபகரணங்கள் உள்ளிட்ட முக்கியமான அத்தியாவசியப் பொருட்கள், MS-04 என்ற விண்கலத்தின் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
 
இந்த விண்கலம் புறப்பட்ட 383 வினாடிகளில் வெடித்து சிதறியது. இதேபோல் 2015ஆம் ஆண்டு சரக்குகளை ஏற்றிச் சென்ற விண்கலம் வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா மர்மத்தை உடைக்கும் பிரதாப் ரெட்டியின் பேட்டி (வீடியோ இணைப்பு)