Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவை தோலுரித்த இந்திய வம்சாவளி பத்திரிக்கையாளர்! – புலிட்சர் விருது அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2021 (11:26 IST)
ஆண்டுதோறும் பத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கும் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் புலிட்சர் விருது இந்த முறை இந்திய வம்சாவளி பத்திரிக்கையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கை துறையில் சிறந்த செயல்களை செய்த பத்திரிக்கையாளர்களை கௌரவிக்கும் விதமாக அமெரிக்காவில் புலிட்சர் விருது வழங்கப்படுகிறது. உலகளாவிய செய்திகள், உள்ளூர் செய்திகள், புகைப்படக்காரர் என பல பிரிவுகளில் இந்த புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதில் சிறந்த உலகளாவிய பிரச்சினை குறித்த செயல்பாட்டிற்காக இந்திய வம்சாவளி பத்திரிக்கையாளரான மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் வாழும் பழங்குடி இன மக்களான உய்குர் பழங்குடிகளை கட்டாய கருத்தடை செய்தது, தொழிலாளர் சட்டத்தை மீறி வேலை வாங்கியது உள்ளிட்டவற்றை ஆதாரங்களுடன் மேகா வெளியிட்ட நிலையில், சீனா மீது ஐ.நா உலகசபை நாடுகள் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளன. அதற்கு சான்றாக மேகாவின் கட்டுரை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவின் மனித உரிமை மீறலை தோலுரித்து காட்டிய மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments