Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிரிக்கெட் வீரர்களுக்கு கூல் டிரிங்ஸ் வழங்கிய பிரதமர்..

Advertiesment
கிரிக்கெட் வீரர்களுக்கு கூல் டிரிங்ஸ் வழங்கிய பிரதமர்..

Arun Prasath

, வெள்ளி, 25 அக்டோபர் 2019 (13:44 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு மைதானத்திற்குள் சென்று அந்நாட்டு பிரதமர் கூல் டிரிங்ஸ் வழங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர்களை வரவேற்கும் விதமாக பிரைம் மினிஸ்டர் லெவன் அணியுடன் டி 20 பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. முதல் பேட்டிங் செய்த இலங்கை அணி, 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. அதன் பின்பு களமிறங்கிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் குவித்து வெற்றி பெற்றனர்.

இதனிடையே இலங்கை அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் டிரிங்ஸுடன் மைதானத்திற்குள் நுழைந்தார். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

பின்பு வீரர்களுக்கு வாழ்த்துகள் கூறி விடைபெற்றார். இந்நிகழ்வு பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

28 ஆம் தேதி இறைச்சி கூடங்கள் மூடல்…