Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முடிவாகும் இம்ரான் கான் தலையெழுத்து!

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (09:03 IST)
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 

 
பாகிஸ்தானில் இம்ரான்கான் பிரதமராக ஆட்சி செய்து வரும் நிலையில் சமீப காலமாக பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிகளால் இம்ரான்கான் ஆட்சி ஸ்திரத்தன்மை இழந்துள்ளது. இந்நிலையில் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில் அதை சபாநாயகர் நிராகரித்தார். அதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் ஆட்சியை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்துவதாக அறிவித்தார்.
 
ஆனால் எதிர்கட்சிகள் இதை எதிர்த்து பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இம்ரான்கான் ஆட்சியை கலைத்தது செல்லாது என அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பதாக இம்ரான்கான் அறிவித்துள்ளார்.
 
அதன்படி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த வாக்கெடுப்பு முடிந்தவுடன் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கண நேரத்தில் காணாமல் போன வீடுகள்! லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ! - எலான் மஸ்க் பகிர்ந்த வீடியோ!

திடீர் ட்விஸ்ட்.. சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியாரிய இயக்கத்தினர் கைது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பிரச்சாரத்திற்கு தயாராகும் திமுக நிர்வாகிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments