பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பாகிஸ்தானிலும் பள்ளி மாணவிகள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது.
பாகிஸ்தான் ஆப்கிரமிப்பு காஷ்மீரில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டும் என்றும் ஹிஜாப் அணியாத மாணவிகள் மீது கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது
கடுமையான நிதி நெருக்கடி, மருந்து பற்றாக்குறை, உணவு பற்றாக்குறை ஆகிய அடிப்படை தேவைகளுக்கு போராடும் சூழ்நிலையில் இப்படி ஒரு சட்டம் தேவையா என அந்நாட்டின் பெண்கள் அமைப்பு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சியாளர்களை பாகிஸ்தான் அரசும் பின்பற்றுகிறதா என்றும் மகளிர் அமைப்புகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இருப்பினும் பாகிஸ்தான் அரசு ஹிஜாப் அணிவதை கட்டாயம் ஆக்குவதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.