Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானிலும் டிக்டாக்கிற்கு தடை – அடுத்தடுத்து வரும் சோதனை!

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (19:16 IST)
டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் தொலைதொடர்புத் துறை தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிக்டாக் உள்ளிட்ட பல சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்தது. இதையடுத்து சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க அரசும் அதே முடிவை எடுக்கும் விதமாக செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு டிக் டாக் செயலியை விற்பனை செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் டிக் டாக் செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இந்நிலையில் இப்போது அமெரிக்க செயலியான டிவிட்டர் நிறுவனம் டிக்டாக்கை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் முன்னிலையில் மைக்ரோ சாப்ட் நிறுவனமே உள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இப்போது பாகிஸ்தானிலும் டிக்டாக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்புகளில் இருந்தும் டிக்டாக்குக்கு எதிராக புகார்கள் வந்ததை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இது சம்மந்தமாக பாகிஸ்தான் தொலை தொடர்பியல் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

அடுத்த கட்டுரையில்
Show comments