Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

DeepSeek-க்கு ஆப்பு வைக்க ஓபன் AI செய்த தந்திரம்! புதிதாக வெளியானது o3 Mini!

Advertiesment
Deepseek vs o3 Mini

Prasanth Karthick

, செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (10:55 IST)

சீனாவின் டீப்சீக் (DeepSeek) ஏஐக்கு போட்டியாக குறைந்த விலையில் சந்தையில் o3 Mini என்ற சாட்ஜிபிடி வெர்சனை களம் இறக்கியுள்ளது ஓபன் ஏஐ நிறுவனம்.

 

ஓபன் ஏஐ நிறுவனம் பல ஆண்டுகள் பயிற்றுவித்து உருவாக்கி சாட்ஜிபிடியின் வருகை தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பல துறைகளிலும் AI வருகையால் Automation Process வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சாட்ஜிபிடியின் பலத்தரப்பட்ட அதிநவீன சேவைகளையும் பெற அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.

 

இந்நிலையில்தான் கடந்த வாரம் சீனாவை சேர்ந்த டீப்சீக் நிறுவனம் DeepSeek R1 என்ற புதிய ஏஐ தொழில்நுட்பத்தை வெளியிட்டது. மேலும் இதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் மிக குறைவு என்பதாலும், கட்டணமில்லா சேவைகளில் சாட் ஜிபிடியை விட அதிக வசதிகளை வழங்கியதாலும் பலரும் டீப்சீக் பக்கம் சாயத் தொடங்க அமெரிக்க பங்குச்சந்தையே ஸ்தம்பிக்கும் சூழல் உருவானது.

 

ஆனால் டீப்சீக் ஏஐயிலும் சீனா மற்றும் கம்யூனிச அமைப்புகளுக்கு தொடர்பான தகவல், தரவுகளை ஆராய்கையில் அது பல தகவல்களை தர மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

 

இந்நிலையில் டீப்சீக் மார்க்கெட்டை க்ளோஸ் செய்யும் விதமாக ஓபன் ஏஐ o3 Mini என்ற ஏஐ வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. டீப்சீக்கை விட அதிகமாக செயல்படும் இந்த புது வெர்ஷனில் டீப்சீக் போலவே 30 டாலர் மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பயனர்களின் பார்வை ஓபன் ஏஐ பக்கம் திரும்பியுள்ளது. தொடர்ந்து இந்த ஏஐ போரில் மற்ற நாடுகளும் தங்கள் ஏஐ வெர்சன்களை களமிறக்கும் என்று பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவெகவில் உட்கட்சி பூசல்.. மகளிரணி நிர்வாகி பரபரப்பு வீடியோ!? - என்ன செய்யப் போகிறார் விஜய்?