நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!

Prasanth Karthick
புதன், 31 ஜனவரி 2024 (12:12 IST)
ஜெர்மனியில் வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை என்ற புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.



உலகம் முழுவதிலும் வாரத்தின் 5 நாட்கள் வேலை நாள், சனி, ஞாயிறு விடுமுறை அல்லது 6 நாட்கள் வேலை நாள் ஞாயிறு விடுமுறை என பல்வேறு வகையான வேலை, விடுமுறை நாள் அமைப்பு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக சில நாடுகள் வேலை நாட்களுக்கு இணையான விடுமுறை நாட்கள் அளிப்பது குறித்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ALSO READ: அனைத்து துறைகளிலும் இந்தியா சாதனை..! குடியரசுத் தலைவர் பெருமிதம்..! மத்திய அரசுக்கு பாராட்டு..!!

முன்னதாக ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பணியாளர்கள் மகிழ்ச்சி அதிகரித்துள்ளதாகவும், உற்பத்தி திறனும் கூடியுள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. இந்நிலையில் இந்த வேலைத்திட்ட முறையை ஜெர்மனியும் சோதித்து பார்க்க உள்ளது.

அதன்படி பிப்ரவரி 1 முதல் அடுத்த 6 மாதங்களுக்கு ஜெர்மனியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் பலனளிக்கும் பட்சத்தில் இதை நீண்ட கால நோக்கில் நீட்டிக்கவும் ஜெர்மனி அரசு ஆலோசித்து வருகிறதாம்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments