Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெர்மன் நாட்டின் கவுரமிக்க அமைதி பரிசு சல்மான் ருஷ்டிக்கு அறிவிப்பு

ஜெர்மன் நாட்டின்  கவுரமிக்க அமைதி பரிசு சல்மான் ருஷ்டிக்கு  அறிவிப்பு
, செவ்வாய், 20 ஜூன் 2023 (21:19 IST)
ஜெர்மன் நாட்டின்  கவுரமிக்க அமைதி பரிசு சல்மான் ருஷ்டிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தளர் சல்மான் ருஷ்டி கடந்த 1988 ஆம் ஆண்டு எழுதிய தி சாத்தானிக் வெர்சஸ் என்ற புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து  சில   நாடுகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொலைமிரட்டல்கள் விடுத்தன.

இந்த  நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி பங்கேற்றபோது, அவரை ஒரு வாலிபர் கத்தியால் குத்தினார்.

இத்தாக்குதலில் அவர் கண்பார்வை இழந்துள்ளார். இந்த சம்பவத்திற்குப் பின்  கடந்த 20 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

அப்போது, அவர் தன் மீதான கத்திக்குத்து தாக்குதல் பற்றி புத்தகம் எழுதப் போவதாகக்  கூறியிருந்தார்.

இந்த நிலையில்,  ஜெர்மன் நாட்டின் கவுரமிக்க அமைதி பரிசு சல்மான் ருஷ்டிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது அவரது இலக்கிய பணி மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும், தொடர்ந்து எழுதி வருவதற்கும்,  அவரது நேர்மை மற்றும் உறுதித்தன்மைக்கு  இப்பரிசுக்கு அவர் தேர்வு செய்யட்டுள்ளதாக இந்த விருதிற்காக நடுவர் குழு அறிவித்துள்ளது.

வரும் அக்டோர் மாதம் 22 ஆம் தேதி பிராங்க்பர்ட் நகரில் நடைபெறும் விழாவில் இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.

கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விழாவில் அவருக்கு ரூ.25 ஆயிரம் யூரோ ( இந்திய மதிப்பில் ரூ.22 லட்சத்து 25 ஆயிரம்) வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யோகாவே மனம், உடல் ஆரோக்கியத்துக்கான வழி - பிரியதர்ஷினி