Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாம்சங் நிறுவன தலைவருக்கு ஒன்றரை சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சாம்சங் நிறுவன தலைவருக்கு ஒன்றரை சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
, வியாழன், 19 டிசம்பர் 2019 (08:33 IST)
சாம்சங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சாம்சங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் அந்நிறுவனத்தின் தொழிற்சங்கங்களை மூட முயற்சித்ததற்காகவும், தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்க முயன்றதாகவும் புகார் கூறப்பட்டு அவர்கள் மீது சியோல் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பின்படி, இருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதி, இருவருக்கும் தலா ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் இருவரின் முன்ஜாமீன் மனுக்கள் ரத்து செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
முன்னதாக செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் உலகின் முன்னணியில் இருக்கும் இந்த நிறுவனத்தின் தலைவராக லீ சாங் ஹோனும், துணைத்தலைவராக காங் குயாங் ஹூன் ஆகிய இருவரும் தொழிலாளர் சங்கங்களை மூடுவதற்காகவும், சங்க உறுப்பினர்களின் ஊதியத்தை குறைக்கவும், அவர்களின் தனிப்பட்டதகவல்களை சேகரிக்கவும் உத்தரவிட்டதாக புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போராட்டம் செய்த மாணவர்களை அப்புறப்படுத்திய போலீசார்: சென்னை பல்கலையில் பரபரப்பு