ஒமிக்ரான் கடைசி உருமாற்றம் இல்லை..! – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (08:25 IST)
உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவல் அதன் முடிவை எட்டியுள்ள நிலையில் இது முழு முடிவாக இருக்காது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் பரவலால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், தொடர்ந்து ஆல்பா, பீட்டா, டெல்டா, ஒமிக்ரான் என பல வேரியண்டுகளில் கொரோனா தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பின் தொழிநுட்பக்குழு தலைவர் மரியா வான்கோவ் பேசியபோது “கொரோனா வைரஸ் பற்றி நிறைய தெரிந்துகொண்டுள்ளோம். ஆனால் எல்லாமே நமக்கு தெரியாது. இது மாறும்போது, உருமாற்றம் நேருகிறது. அது மேலும் உருமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒமைக்ரான் வைரஸ் கவலைக்குரிய மாறுபாடு. இது கடைசி உருமாற்றமாக இருக்காது. நாம் மற்ற வகை உருமாற்ற வைரஸ்களைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உண்மையிலேயே அதிகமாக உள்ளது. ” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments