Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓமன் கடலில் கவிழ்ந்தது எண்ணெய் கப்பல்.. 13 இந்தியர்கள் என்ன ஆனார்கள்?

Siva
புதன், 17 ஜூலை 2024 (08:18 IST)
ஓமன் கடலில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததை அடுத்து அதிலிருந்து 13 இந்தியர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓமன் கடலில் நேற்று இரவு திடீரென எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததாகவும் அந்த கப்பலில் பணியாற்றிய இந்தியர்கள் 13 பேர் உட்பட 16 பேர்களை காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஓமன் நாட்டில் கடல் பகுதியில் கவிழ்ந்த கப்பல் மூழ்கி விட்டதாகவும் இந்த கப்பலில் இந்தியாவைச் சேர்ந்த 13 பேர் மற்றும் இலங்கை சேர்ந்த மூன்று பேர் என்ன மொத்தம் 16 ஊழியர்கள் இருந்ததாகவும் இந்த கப்பல் தலைகீழாக கவிழ்ந்து இருக்கும் நிலையில் அதில் இருந்த எண்ணெய் கசிவு குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த கப்பலில் பணிபுரிந்த 16 ஊழியர்கள் காணாமல் போனதை அடுத்து அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த கப்பல் துபாயிலிருந்து ஹம்ரிகா துறைமுகத்திற்கு சென்று கொண்டு இருந்த நிலையில் ஏமன் பகுதியில் செல்லும் போது திடீரென கவிழ்ந்துள்ளது. கப்பல் கவிழ்ந்ததுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இந்த நிலையில் காணாமல் போன 13 இந்தியர்களை கண்டுபிடிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments