Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனுக்கு அடைக்கலம் கொடுக்க முன்வந்த சிறுவனை பாராட்டிய ஒபாமா

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2016 (18:40 IST)
சிரியாவில் குண்டுவெடிப்பால் இடிந்து போன கட்டிடத்தில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவனை, அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் ஒருவன், தான் அந்த சிறுவனை சிரியாவில் இருந்து அழைத்து வர விரும்புவதாக ஒபாமாவுக்கு கடிதம் எழுதினான். அதற்கு ஒபாமா அந்த சிறுவனை நேரில் அழைத்து பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.


 

 
சிரியாவில் குண்டுவெடிப்பால் காயமடைந்த சிறுவனின் புகைப்படம் இணைதளத்தில் வைரலாக பரவியது. அதைத்தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் ஒருவன், தான் அந்த சிறுவனை அழைத்து வந்து, தன்னுடன் பள்ளியில் ஆங்கிலம் பயிற்றுவிக்க போவதாக ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதினான்.
 
அதை ஒபாமா படித்து மிகவும் உறைந்துபோனார். அந்த சிறுவனை நேரில் அழைத்து, அவனுக்கு பார்ரட்டுகள் தெரிவித்தார். அந்த சிறுவனிடம், நீ மிகவும் அன்பானவனாகவும், கருணை உள்ளவனாகவும் இருப்பதோடு மட்டுமில்லாமல் பிறரையும் அதேவகையில் நினைக்கும்படி செய்து விட்டாய், என்று பாராட்டியுள்ளார்.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments