Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நார்வே நாட்டு இளவரசியின் கணவர் தற்கொலை! – சோகத்தில் நார்வே!

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2019 (09:14 IST)
நார்வே நாட்டு இளவரசியின் முன்னாள் கணவரும், பிரபல நாவலாசிரியருமான அரி பென் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நார்வேயில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நார்வேயை சேர்ந்த பிரபல நாவலாசிரியர் அரி பென். பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ள இவருக்கு நார்வே, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் வாசகர்கள் உள்ளனர். மேற்கண்ட நாடுகள் இவருக்கு பல விருதுகளையும், சிறப்பு அங்கீகாரத்தையும் அளித்துள்ளன.

2002ம் ஆண்டு இவருக்கும், நார்வே இளவரசி மார்த்தா லூயிஸுக்கும் திருமணமானது. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரிடையே ஏற்பட்ட மனக்கசப்பால் 2017ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதற்கு பிறகு ஓஸ்லோ நகரில் தனிமையில் வாழ்ந்து வந்த அரி பென் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து நார்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நார்வே இளவரசியின் முன்னாள் கணவரும், பிரபல நாவலாசிரியருமான அரி பென் தற்கொலை செய்து கொண்டுள்ளது அரச குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: டாக்டர் ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. அதற்கு அவர் கொடுத்த கமெண்ட்..!

தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments