போரை நிறுத்துற ஐடியா இல்ல! அணு ஆயுத படை ஒத்திகை நடத்திய ரஷ்யா!

Prasanth K
வியாழன், 23 அக்டோபர் 2025 (09:37 IST)

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயன்று வரும் நிலையில் ரஷ்யா அணு ஆயுத படை ஒத்திகை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த 4 ஆண்டு காலமாக போர் நடந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க அதிபராக வந்த டொனால்டு ட்ரம்ப் இந்த போரை நிறுத்துவதை தனது முதன்மையான பணியாக கூறியிருந்தார். அதற்காக கடுமையாக முயற்சித்தும் வருகிறார். அது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் - டொனால்டு ட்ரம்ப் இடையே அலாஸ்காவில் சந்திப்பு நடந்தது.

 

ஆனால் அதில் போர் நிறுத்தம் தொடர்பான திருப்தியான முடிவுகள் எட்டப்படவில்லை. அதை தொடர்ந்து புதினை பல இடங்களில் ட்ரம்ப் விமர்சித்து பேசியுள்ளார். தொடர்ந்து ஹங்கேரியில் நடக்கும் மாநாட்டில் மீண்டும் புதினை சந்தித்து பேச உள்ளதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.

 

ஆனால் ரஷ்யாவோ போரை தொடர்ந்து நடத்துவதிலேயே திட்டவட்டமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ரஷ்ய ராணுவம் அணு ஆயுத படைகளின் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இதில் கலந்துக் கொண்ட புதின் அணு ஆயுதங்களில் செயல்பாடுகளை மேற்பார்வையிட்டுள்ளார். இந்த ஒத்திகையில் பாலிஸ்டிக் ஏவுகணைகள், நீர்மூழ்கி ஏவுகணைகள், குண்டுவீச்சு விமானங்கள் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்துற ஐடியா இல்ல! அணு ஆயுத படை ஒத்திகை நடத்திய ரஷ்யா!

இந்தியா மீதான வரியை 15 சதவீதம் குறைக்கிறோம்.. ஆனால்..? - அமெரிக்கா போடும் கண்டிஷன்!

டிரம்ப் கலந்து கொள்ளும் உச்சிமாநாட்டில் மோடி கலந்து கொள்ள மறுப்பு.. சந்திப்பை தவிர்க்கவா?

தவறான ஊசி போட்டதால் பச்சிளம் குழந்தையின் கையை எடுக்க வேண்டிய நிலை: மருத்துவரின் அலட்சியமா?

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய திமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்.. மாரடைப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments