Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி காலமானார்.

நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி காலமானார்.
, திங்கள், 2 ஏப்ரல் 2018 (22:17 IST)
கருப்பின தலைவர் என்று தென்னாப்பிரிக்க மக்களால் மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் நெல்சன் மண்டேலா. இவருடைய முன்னாள் மனைவி வின்னி என்பவர் இன்று காலமானார். அவருக்கு வயது 81

நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் வாடியபோது அவருக்கு பக்கபலமாக இருந்து தானும் வீட்டுச்சிறை தண்டனை அனுபவித்தவர் வின்னி மண்டேலா.

1958-ம் ஆண்டு ஆண்டு நெல்சன் மண்டேலாவுக்கு வின்னிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணமான நான்கே ஆண்டுகளில் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் விடுதலையான மண்டேலா பின்னர் 1994ஆம் ஆண்ட் தென்னாபிரிக்கவின் அதிபர் ஆனார். அப்போது வின்னி மண்டேலா தென்னாப்பிரிக்க நாட்டின் கலை மற்றும் கலாசாரத்துறை இணை மந்திரியாக பணியாற்றினார். ஆனால் இருவருக்கும் இடையே திடீரென கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் 1996ஆம் ஆண்டு மண்டேலாவை விவாகரத்து செய்தார் வின்னி.

webdunia
இந்த நிலையில் இன்று அவர் உடல்நலக்கோளாறு காரணமாக ஜோகன்ஸ்பெர்க் நகரில் காலமானார். நெல்சன் மண்டேலா கடந்த 2013ஆம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போராடுவது சரியா?