Webdunia - Bharat's app for daily news and videos

Install App

82 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை: கொரோனாவால் உலக அளவில் பதட்டம்

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (08:11 IST)
82 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை
சீனாவில் உள்ள வூகான் என்ற மாகாணத்தில் பயணத்தை ஆரம்பித்த கொரோனா வைரஸ் அந்நாடு முழுவதும் பரவியது மட்டுமின்றி கிட்டத்தட்ட 190 நாடுகளுக்கு தற்போது வைரஸ் பரவி மனித குலத்தையே அச்சுறுத்தி வருகிறது.
 
கொரோனாவின் வைரஸின் தாயகம் என்று கருதப்படும் சீனா கூட தற்போது இந்த நோயிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில் அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகள் கொரோனாவுக்கு பயங்கரமாக பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து நெருங்கி உள்ளது என்றும் அதாவது 81,987 என்று தகவல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 7500 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒருபக்கம் 82 ஆயிரத்து நெருங்கி உள்ள நிலையில் இன்னொரு பக்கம் சுமார் 15 லட்சம் பேர் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் வைரசால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கும் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கில் தினமும் பலியாகி வருவது அந்நாட்டையே சீர்குலைத்துள்ளது. மேலும் இதுவரை கொரோனாவால் பிரிட்டனில் 55,242 பேர்கள் பாதிக்கப்பட்டும் 6159 பேர் பலியாகியும் உள்ளனர். அதேபோல் துருக்கியில் 34,109 பேர் பாதிக்கப்பட்டும். 725 பேர் பலியாகியும் உள்ளனர். சுவிஸ் நாட்டில் 22,253 பேர் பாதிக்கப்பட்டும். 821 பேர் பலியாகியும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments