Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மர்மம் நிறைந்த, தடை செய்யப்பட்ட பாம்பு தீவு!!

Advertiesment
மர்மம் நிறைந்த, தடை செய்யப்பட்ட பாம்பு தீவு!!
, திங்கள், 21 நவம்பர் 2016 (12:32 IST)
உலகில் மனிதர்கள் வாழ்வதற்கும், சுற்றுலா செல்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ள இடங்களில் பாம்பு தீவும் ஒன்றாகும்.


 
 
அட்லாண்டிக் பெருங்கடலில் பிரேஸிலின் சா பாலோ மாகாணத்தில் இருந்து சுமார் 33 கி.மீ. தொலைவில், 4,30,000 ச.மீ. பரப்பளவு கொண்ட Ilha da Queimada Grande என்ற தீவு உள்ளது.
 
இந்த தீவில் எண்ணிலடங்காத அளவில் பாம்புகள் இருக்கின்றன. இதனாலேயே இதற்கு பாம்புகள் தீவு என்று மற்றொரு பெயருள்ளது.
 
இந்தத் தீவில் கால்வைக்கும் ஒவ்வொரு 4 அடிக்கும் ஒரு பாம்பை  பார்க்க முடியும். அதிலும் கோல்டன் பிட் வைப்பர் என்ற பாம்பு வகையே இங்கு அதிகளவில் காணப்படுகின்றன.
 
இந்தத் தீவில் உள்ள பாம்புகளைப் பாதுகாப்பதற்காகவே இந்த பாம்புத் தீவு மூடி வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த தீவிற்குள் ஆராய்ச்சி செய்வதற்காக செல்ல வேண்டும் என்றால் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த புகைப்படத்தில் உங்களுக்கு ஏதேனும் தெரிகிறதா?