Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மர்மமான பெர்முடா ட்ராய்ங்கிள்

மர்மமான பெர்முடா ட்ராய்ங்கிள்
, புதன், 25 மே 2016 (01:56 IST)
அட்லாண்டிக் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் பெர்முடா முக்கோணம் பற்றிய ரகசியங்கள்.


 

 
அட்லாண்டிக் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நீர் பரப்பைத்தான் பெர்முடா முக்கோணம் என்று அழைக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் சரியான கடலியல் அளவுகோளில் சொல்வதென்றால் புளோரிடா நீரிணை, பெர்முடா தீவு, கரீபியன் தீவுகள் ஆகிய மூன்று நிலப்பரப்புகளை ஒரு முக்கோணம் போல இணைக்கும் இந்தக் கடல் பகுதி முழுவதும் பெர்முடா ட்ராய்ங்கிள் என்று அழைக்கப்படுகிறது. 
 
காணாமல் போன மெக்ஸிகோ விமானங்கள் இந்த முக்கோணக் கடல்பகுதியின் மர்மம் வெளியுலகத்துக்கு தெரிய ஆரம்பித்தது கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகத்தான். இந்தக் கடல் பகுதியை கடந்து சென்ற நிறைய கப்பல்களும் விமானங்களும் காணாமல் போயியிருக்கின்றன. இந்த மர்மத்தை பற்றி 1950இல் தான் முதல் கட்டுரை வெளியாகியிருக்கிறது. 
 
மெக்ஸிகோவில் குடியரசு தினத்தன்று நிகழ்த்த வேண்டிய சாகஸத்தை பயிற்சிசெய்து பார்க்க அந்தப் பகுதிக்குச் சென்றபோது பிளைட் 19 ரக விமானங்கள் ஐந்தும் மாயமாக மறைந்துபோயின. அந்த விமானங்களில் இருந்த ஒரு விமான ஓட்டி "நாங்கள் இப்போது வெள்ளைக் நிறத்தில் இருக்கும் தண்ணீருக்குள் போய்கொண்டிருக்கிறோம்.... இல்லை... இல்லை.. இந்தத் தண்ணி பச்சையா இருக்கு!” என்று சொன்னதாக அவரது குரல் பதிவாகியிருக்கிறது. 
 
அந்த விமானங்களின் திசைகாட்டியும் தாறுமாறாக அங்கே பறந்தபோது வேலை செய்திருக்கிறது. இந்த ஐந்து விமானங்களையும் காணவில்லையே என்று அவற்றைத் தேடிச்சென்ற ஆறாவது விமானமும் மர்ம முக்கோணக் கடலில் பறந்தபோது காணாமல் போனது. 
 
மேலும் இன்று வரை பெர்முடா முக்கோணத்தின் ரகசியம் பற்றி எந்த தொழில்நுட்பத்தாலும் கண்டறிய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியன்: நாசா தகவல்