Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரியும் வீட்டில் இருந்து குழந்தையை காப்பாற்றிய தாயாருக்கு சிறை: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (15:25 IST)
தீப்பிடித்து எரியும் வீட்டில் இருந்து தன்னுடைய குழந்தைகளை காப்பாற்றிய தாயாரை வட கொரிய அரசு சிறையில் அடைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
வடகொரிய நாட்டில் வட ஹேம்ஹாங் என்ற மாகாணத்தில் கடந்த 30ஆம் தேதி திடீரென இரண்டு வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தன்னுடைய குழந்தை அந்த வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருப்பதை அறிந்த தாயார் உடனடியாக ரிஸ்க் எடுத்து வீட்டின் உள்ளே போய் குழந்தைகளை காப்பாற்றினார். அந்த குழந்தையை காப்பாற்றிய தாயாருக்கு பாராட்டுக்கள் குவிந்தன 
 
இந்த நிலையில் வடகொரியாவின் ஒவ்வொரு வீட்டிலும் அதிபர் கிம் ஜாங் உன் புகைப்படம் இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த புகைப்படம் இந்த தீ விபத்தில் எரிந்து சாம்பலானது விசாரணையில் தெரியவந்தது. ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருக்கும் புகைப்படத்துக்கு சேதம் ஏற்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்படுவது வட கொரியா நாட்டின் சட்டம். அதன்படி குழந்தையை காப்பாற்றிய அந்த தாயார் புகைப்படத்தை ஏன் காப்பாற்றவில்லை என்று கூறி கைது செய்யப்பட்டார். அவர் மீது விசாரணை நடந்து வருகிறது. அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? அண்ணா பல்கலை விவகாரம் குறித்து ஈபிஎஸ்

சென்னை புத்தகக் கண்காட்சி: நாளை தொடங்கி வைக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டம்.. சோதனை ஓட்டம் தொடங்கியது..!

லுங்கி கட்டிக்கொண்டு இசைக் கச்சேரிக்கு வந்த டி.எம்.கிருஷ்ணா! நிரம்பி வழிந்த மியூசிக் அகாடமி!

அரசு ஊழியர் பணி ஓய்வு விழா! கண் முன்னால் பலியான மனைவி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments