Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக புகழ்பெற்ற தலைவர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (12:38 IST)
உலகப் புகழ் பெற்ற தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் முதலிடம் கிடைத்துள்ளது. 
 
உலக அளவில் நிர்வாக திறன் கொண்ட தலைவர்கள் மற்றும் செல்வாக்கு உள்ள தலைவர்கள் குறித்த கணிப்பு நடத்தப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் உலக அளவில் மக்களால் அதிகம் மதிக்கப்படும் தலைவராக பிரதமர் மோடி தொடர்ந்து நீடிக்கிறார். அவருக்கு 76 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. 
 
இந்திய பிரதமர் மோடியை அடுத்து மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மேனுவல் லோபஸ் ஆப்ரடார் 2-ம் இடத்திலும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் 3-ம் இடத்திலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 6-ம் இடத்திலும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் 10ஆம் இடத்திலும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் 11ஆம் இடத்திலும் உள்ளனர்.
 
மொத்தம் 22 பேர் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் தென்கொரிய அதிபர் யூன் சுக்-யோல் 19 சதவீத ஆதரவுடன் கடைசி இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments