Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10,000 ஆண்டுகள்; மம்மூத் யானையின் எலும்புக்கூடு ஏலத்தில்....

10,000 ஆண்டுகள்; மம்மூத் யானையின் எலும்புக்கூடு ஏலத்தில்....
, திங்கள், 18 டிசம்பர் 2017 (17:32 IST)
10,000 ஆண்டுகளுக்கு முன் வாழந்த மம்மூத் யானையின் எலும்புக்கூடு தற்போது ரூ.4 கோடியே 13 லட்சத்திற்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
மம்மூத் இன யானைகள் நீண்ட ரோமங்களுடனும், மிகப்பெரிய வளைந்த தந்தங்களுடனும் காட்சியளிக்கும். இது பனியுக காலத்தில் ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்தன. 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அதிகமான அளவில் வாழ்ந்த இந்த வகை மம்மூத் யானைகள் மதனிர்களால் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த யானை இனம் பருவநிலை மாற்றம் காரணமாக அழிந்துவிட்டது எனவும் கூறப்படுகிறது.
 
பனியுக காலத்தில் வாழ்ந்த இந்த இன யானைகள் பூமி வெப்பமடைந்த போது இறந்து இருக்கலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தற்போது ம்மமூத் யானையின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த யானையின் எலும்புக்கூட்டை பிரெஞ்ச் பொட்டார் புரூப்பிங் கம்பெனி, ரூ.4 கோடியே 13 லட்சத்துக்கு  ஏலத்துக்கு எடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக முதல்வர் வேட்பாளரை வீழ்த்திய காங்கிரஸ்