Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவில் மோதியது விண்கலம்? லூனா 25 தோல்வி! – எதிர்பார்ப்பில் சந்திரயான்-3!

Webdunia
ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (15:45 IST)
பல ஆண்டுகளுக்கு பின்னர் ரஷ்யா நிலவுக்கு அனுப்பிய லூனா-25 விண்கலம் தோல்வி அடைந்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.



நிலவின் தென் துருவத்தில் நீர் குறித்த ஆராய்சிகளை மேற்கொள்ள இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியுள்ளது. அதேபோல ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையமும் தென் துருவத்தை ஆராய “லூனா-25” என்ற விண்கலத்தை ஏவியது.

கடந்த 10ம் தேதி அனுப்பப்பட்ட இந்த விண்கலம் 11 நாட்கள் பயணத்தில் நிலவின் சுற்றுவட்ட பாதையை அடைந்தது. லூனா 25-ம் சந்திரயான் 3 தரையிறங்கும் அதே ஆகஸ்ட் 23ல் நிலவில் தரையிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம் எது என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

இந்நிலையில் இன்று நிலவை சுற்றிவரும் லூனா-25-ன் சுற்றுவட்ட பாதையை குறைக்கும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டிருந்தது. அப்போது விண்கலத்திலிருந்து சிக்னல் கோளாறு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. நீண்ட நேரம் முயற்சி செய்தும் லூனா-25-ஐ திரும்ப தொடர்பு கொள்ள முடியாத நிலையில் லூனா-25 நிலவில் மோதி இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனால் லூனா-25 திட்டம் தோல்வி அடைந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

சுமார் 47 வருடங்கள் கழித்து நிலவு ஆராய்ச்சிக்காக லூனா-25 ஐ தயார் செய்த ரஷ்யா இதற்காக ரூ.1662 கோடியை செலவு செய்திருந்தது. லூனா-25 தோல்வியடைந்த நிலையில் தற்போது உலக விஞ்ஞானிகளின் கவனம் சந்திரயான் 3 பக்கம் திரும்பியுள்ளது. சந்திரயான் 3-ன் வெற்றிக்காக உலக நாடுகள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றைக்கும்.. என்றைக்கும்.. நீ எங்கள் நெஞ்சத்தில்..! - கேப்டன் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின், கமல், ரஜினி நினைவஞ்சலி!

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

அண்ணாமலை பப்ளிசிட்டிக்காக பண்ணியிருப்பார்.. மாணவி வன்கொடுமையில் சிபிஐ விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்!

கொட்டும் மழை.. 20 மணி நேரத்திற்கும் மேலாக தரிசனத்திற்கு காத்திருக்கும் திருப்பதி பக்தர்கள்!

இன்று முதல் 4 நாட்களுக்கு பட்டா வலைதளம் செயல்படாது! தமிழக அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments