Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை கொன்று நாய்க்கு உணவாக போடும் தலிபான்கள்: பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (18:42 IST)
பெண்களை கொன்று அவர்களின் உடல்களை நாய்க்கு உணவாக தாலிபான்கள் போடுகிறார்கள் என்று தாலிபான்களால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரும் திடுக்கிடும் தகவலை தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தாலிபான்கள் ஆட்சி வந்துவிட்டாலே பெண்களுக்கு உரிமைகள் கிடைக்காது என்றும் பெண்கள் படிக்கவும் பணியாற்றவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டு வருகிற.து இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் சேர்ந்த கதேரா என்பவர் தற்போது டெல்லியில் தங்கி உள்ளார் 
 
ஆப்கானிஸ்தானில் அவர் பணி முடிந்து வீடு திரும்பிய போது அவரை தாலிபான்கள் வழிமறித்ததாகவும் அவரது அடையாள அட்டையை பார்த்ததோடு துப்பாக்கியால் தொடர்ச்சியாக சுட்டார்கள் என்று கூறியுள்ளார் கத்தியால் தன்னை தாலிபான்கள் குத்தியதாகவும் தன்னுடைய கண்களையும் தோண்டி எடுத்ததாகவும் கூறியுள்ளார்.
 
அப்போதுதான் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்ததால் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து பின்னர் உயிர் பிழைத்ததாகவும்அவர் தெரிவித்துள்ளார். மேலும் பெண்களை தாலிபான்கள் மிகவும் கொடுமைப் படுத்துவார்கள் என்றும் பெண்களை கொன்று அவர்களது உடல்களை சிலநேரம் நாய்க்கு உணவாக வீசுவார்கள் என்றும் அவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, நான் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன் என்றும் கதேரா கூறியிருக்கிறார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

கிறிஸ்துமஸ் தினத்திலும் ஏவுகணை தாக்குதல்.. ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை: முக்கிய குற்றவாளி கைது..!

முதல்வர் அதிஷி போலி விரைவில் கைது செய்யப்படுவார்: அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments