Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோபைடன் அதிரடி நடவடிக்கையால் 42 மாநிலங்களில் குறைந்த கொரோனா பாதிப்பு!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (08:02 IST)
உலகிலேயே மிக அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 3 கோடி வரை அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார்
 
ஜோபைடன் அதிபராக பதவி ஏற்ற பின்னர் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டது. இதன் பயனாக தற்போது அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 42 மாகாணங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் 20 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
மாகாணங்களில் உயர்வை கட்டுப்படுத்த ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு சில விதிமுறைகளை விதித்த அதிபர் ஜோ பைடன் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து குடிமக்களை வலியுறுத்தி வந்தார். இதன் பயனாக கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ளதாகவும் இதே ரீதியில் சென்றால் மிக விரைவில் அமெரிக்காவில் கொரோனா நோயின் தாக்கம் வெகுவாக குறையும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் கிட்டத்தட்ட மூன்று லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் வேலை இழந்துள்ள நிலையில் வேலையற்ற இளைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அதிபர் ஜோ பைடன் செயல்படுத்த தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அடுத்த கட்டுரையில்
Show comments