Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஷ்யாவை நம்ப முடியாது… அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

ரஷ்யாவை நம்ப முடியாது… அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
, புதன், 16 பிப்ரவரி 2022 (10:22 IST)
உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்யா தனது படைகளை திரும்ப பெற்றதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

சோவியத் யூனியன் உடைந்த போது அதில் இருந்து உக்ரைன் பிரிந்து சென்றது. அன்று முதல் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான உறவு சுமூகமாக இல்லை. இந்நிலையில் உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்து வந்தது. இதையடுத்து நவம்பர் முதலாக தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வருகிறது. இதனால் எந்நேரமும் உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இது சம்மந்தமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேச்சு வார்த்தை நடத்தியதாக . எனினும் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை 48 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு வெள்ளை மாளிகை கேட்டுக் கொண்டுள்ளது. அதே போல உக்ரைனில் செயல்படும் அமெரிக்க தூதரகமும் சில தினங்களுக்கு முன்னர் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்யா தனது படையின் பெரும்பகுதியை திரும்ப பெற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகின. அதை உக்ரைனும் உறுதிப் படுத்தியது. இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ‘ரஷ்யா படைகளை திரும்ப பெற்றதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் அதை இன்னும் அமெரிக்க உளவுப் படைகள் உறுதிப்படுத்தவில்லை. ரஷ்யாவை நாம் நம்ப முடியாது. எந்த நேரத்திலும் உக்ரைனைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி தாக்கி அதில் உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் தாக்கப்பட்டால் அதற்கு ரஷ்யா மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்… ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய ரஷ்ய வீராங்கனை!