Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் முடிவுக்கு வந்தது கொரோனா! – அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (09:18 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்ததாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த 2019 இறுதி வாக்கில் பரவத் தொடங்கிய கொரோனா பல கோடி மக்களை பாதித்தது. பல மக்கள் உயிரிழந்தனர். ஊரடங்கு, பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது பல நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாலும் தொடர்ந்து பாதிப்புகள் இருந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது பேசியுள்ள அதிபர் ஜோ பைடன் “அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு முடிவுக்கு வந்துவிட்டது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளை சரி செய்ய தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். ஆனால் தொற்றுநோய் முடிந்துவிட்டது. யாரும் மாஸ்க் அணிவதில்லை. எல்லாரும் நல்ல நிலையில் உள்ளார்கள். கோவிட் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு: பள்ளி தாளாளர்-முதல்வர் ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. தொடங்கியது வேட்புமனு தாக்கல்.. சுயேட்சையின் முதல் மனு..!

திபெத்தில் மீண்டும் நிலநடுக்கம்: ஒரே இரவில் ஆறு முறை ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

தேர்வுக்கு பயந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 12ஆம் வகுப்பு மாணவர்.. டெல்லியில் பரபரப்பு..!

சொந்த வாகனத்தில் சொந்த ஊர் செல்கிறீர்களா? ஒரு முக்கிய அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments