அமெரிக்காவில் அனில் வென்னவல்லி என்ற இந்தியர் தன்னுடன் பணிபுரியும் சக பெண் ஊழியர் ஒருவர் திடீரென ரயில் தண்டவாளத்தில் மயங்கி விழுந்ததை பார்த்து தனது உயிரையும் பொருட்படுத்தாது அவரை காப்பாற்றினார். அந்த பெண் காலையில் சாப்பிடாமல் ரயிலை பிடிக்க அவசரம், அவசரமாக வந்ததால் மயங்கி விழுந்ததாக தெரிகிறது.
ஆனால் சக ஊழியரை காப்பாற்றிய இந்தியரின் பேக் மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டது. அதில் மடிக்கணினி, ஹெட்போன், 200 டாலர் (சுமார் ரூ.13 ஆயிரம் ரொக்கம்), அடையாள அட்டை உள்ளிட்டவை இருந்ததாம்.
இருப்பினும் சக ஊழியரை காப்பாற்றிய நல்ல உள்ளத்திற்காக அனிலின் துணிச்சலை போலீசார் பாராட்டி அவருக்கு 1000 டாலர் (சுமார் ரூ.65 ஆயிரம்) ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினர்.
ஒரு பக்கம் லேப்டாப் உள்பட தன்னுடைய பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட பரிதாபமும், இன்னொரு பக்கம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டையும் பெற்ற அனில் வென்னவல்லிக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லையாம்