Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆதார் அட்டையை அடுத்து அனைவருக்கும் டி.என்.ஏ சோதனை! மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்

Advertiesment
, புதன், 3 மே 2017 (05:43 IST)
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டை அவசியம் என்றும், ஆதார் அட்டை இருந்தால் தான் எந்த ஒரு மானியம் பெற முடியும் என்பது மட்டுமின்றி வாக்காளர் அடையாளர் அட்டை, ரேசன் கார்டு, வங்கிக்கணக்கு, பான் அட்டை உள்பட எந்த ஒரு விஷயத்திற்கும் ஆதார் அட்டை தேவை என்றும் விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. போகிற போக்கை பார்த்தால் ரோட்டில் நடந்து செல்லக்கூட ஆதார் அட்டை கேட்கும் நிலை ஏற்படலாம்



 


இந்த நிலையில் ஆதார் அட்டையை அடுத்து அனைவருக்கும் டி.என்.ஏ சோதனை செய்யும் திட்டமும் மத்திய அரசில் இருப்பதாக மத்திய அரசு அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, 'ஆதார் பெற கைரேகைப் பதிவு கட்டாயம் என்பதில் விதிமீறல் இல்லை. சமுதாயத்தை ஒழுங்குபடுத்த ஆதார் போன்றவை மிகவும் அவசியம். ஆதாருக்குக் கைரேகை உள்ளிட்டவற்றைப் பதிவு செய்வதில் உரிமை மீறல் கிடையாது. ஆதாருக்கு எதிரான மனுக்கள் அதிக அர்த்தமுடையவை அல்ல. தனிநபர் விவரங்களுக்காக டிஎன்ஏ சோதனை செய்யவும் மத்திய அரசிடம் திட்டம் உள்ளது. ஆதார் அட்டைகளைப்போல் போலிகளைத் தயாரிக்க முடியாது. போலிகள் தயாரிக்க முடியாததால்தான் ஆதாரை அரசு கட்டாயமாக்கியது. பான் அட்டையுடன் ஆதார் விவரங்களை இணைப்பதால் வரி ஏய்ப்பைத் தடுக்க முடியும். போலி பான் அட்டையால் ஆயிரம் கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு நடந்துள்ளது"

நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் வெகுவிரைவில் டி.என்.ஏ சோதனையும் செய்யப்படும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜார்ஜ் உள்பட 19 ஐ.பி.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்