Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க அதிபர் மகளுக்கு கொரோனோவா? – அதிர்ச்சியில் இந்திய இளைஞர்கள்!

Webdunia
சனி, 14 மார்ச் 2020 (12:51 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மகளுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது சீனாவில் இதன் தாக்கம் குறைந்திருந்தாலும், ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சமீபத்தில்தான் அவர் வெள்ளை மாளிகை சென்று ட்ரம்ப்பின் மகள் இவான்கா ட்ரம்ப் உள்ளிட்டோரை சந்தித்து வந்தார். இதனால் இவான்காவுக்கும் கொரோனா இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வந்த போது இவான்காவும் வந்திருந்தார். தாஜ்மஹால் அருகே இவான்கா எடுத்த புகைப்படங்களை இந்திய இளைஞர்கள் தங்கள் படத்துடன் இணைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அதற்கு கோபப்படாமல் இந்திய இளைஞர்கள் தன்னிடம் கொண்டுள்ள அன்பையும், ஈர்ப்பையும் கண்டு மகிழ்வதாக இவான்கா தெரிவித்திருந்தார். அதனால் இவான்காவுக்கு இந்திய இளைஞர்கள் இடையே சிறிய அளவில் ரசிகர்கள் உருவாகியிருந்தனர்.

இந்நிலையில் இவான்காவுக்கு கொரோனா இருப்பதாக வெளியான தகவல்களால் இவான்கா குறித்து ட்விட்டரில் பலர் வருத்ததோடு பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இவான்காவுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், ஆஸ்திரேலிய அமைச்சருடன் அவரும் இருந்ததால் பாதுகாப்பு கருதி தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும் அமெரிக்க அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேநீர் விருந்து விஜய் மிஸ்ஸிங்.. யார் யாரெல்லாம் கலந்து கொண்டனர்?

விண்ணில் ஏவ தயார் நிலையில் ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் : இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடும் அமைச்சர் அமித்ஷா... கூடுதல் பாதுகாப்பு..!

டங்க்ஸ்டன் விவகாரத்தில் முதல்வரின் நாடகம் மக்களிடம் எடுபடாது.. செல்லூர் ராஜூ

சட்டவிரோத குடியேறிகளை ஏற்க மறுத்த கொலம்பியா.. ஆத்திரத்தில் டிரம்ப் விதித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments