Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாக்கி சானுக்கு கொரோனா வைரஸா? – ரசிகர்கள் அதிர்ச்சி! ஜாக்கி சான் விளக்கம்!

Webdunia
ஞாயிறு, 1 மார்ச் 2020 (10:51 IST)
பிரபல ஆக்‌ஷன் நடிகர் ஜாக்கி சான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனா மட்டுமல்லாமல் தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகியுள்ளது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பதாக பிரபல ஆக்‌ஷன் நடிகர் ஜாக்கி சான் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா இருப்பதாகவும், அதற்காக அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ரசிகர்கள் உலகம் முழுவதிலும் இருந்து மாஸ்க்குகள், அவர் நலம் பெற வேண்டி அட்டைகள் மற்றும் பல பொருட்களையும் அவருக்கு அனுப்பியுள்ளனர்.

இதற்கு தனது இன்ஸ்டாகிராம் மூலம் பதிலளித்துள்ள ஜாக்கி சான் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும், எனினும் ரசிகர்களின் அக்கறையை எண்ணி மிகவும் மகிழ்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு ரசிகர்கள் அனுப்பிய மாஸ்க் உள்ளிட்ட பொருட்களை கொரோனா பாதித்த மக்களுக்கு அளிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments